உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

பிராட்வே,இலங்கையில், தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, தமிழ்நாடு மீனவர் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.இதில், வி.சி., தலைவர் திருமாவளவன், இ.கம்யூ., கட்சியின் மாநில செயலர் முத்தரசன், மார்க்.கம்யூ., கட்சியின் மாநில செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.மத்திய அரசு மீனவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதில்லை. இரு நாட்டு மீனவர்களும் சுதந்திரமாக மீன்பிடி தொழில் செய்ய, பாக் ஜலசந்தியை பொது மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை