மேலும் செய்திகள்
திருத்தணியில் முதியவர் வெட்டிக்கொலை
03-Jun-2025
திருவொற்றியூர்,ரவுடியை அரிவாளால் சரமாரியாக வெட்டிய, ஐந்து பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.திருவொற்றியூர், ராஜா சண்முகம் நகரைச் சேர்ந்த குள்ள ஆனந்த் என்ற ஆனந்த், 22. ரவுடியாக வலம் வந்த இவர் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன.நேற்று முன்தினம் காலை, ஐந்து பேர் கும்பல் வீடு புகுந்து, அவரை சரமாரியாக வெட்டி தப்பியது. இது தொடர்பாக வண்ணாரப்பேட்டையை சேர்ந்த முரளி, 27, தளபதி, 25, விக்னேஷ், 24, பாலா, 26, சாலமன், 27, ஆகிய ஐந்து பேரை, நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது, அடிதடி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.கொலைவெறி தாக்குதலுக்கான காரணம் குறித்து சாத்தாங்காடு போலீசார் விசாரித்தனர்.
03-Jun-2025