மேலும் செய்திகள்
பெண்ணிடம் அத்துமீறல் ஆட்டோ ஓட்டுநர் கைது
11-Oct-2025
கோயம்பேடு: கோயம்பேடில், ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டிய வழக்கில், ஐந்து பேர் போலீசில் சரணடைந்தனர். கொளத்துார், விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன், 37; ஆட்டோ ஓட்டுனர். பழைய குற்றவாளியான இவர், தற்போது திருந்தி ஆட்டோ ஓட்டி வருகிறார். இரு தினங்களுக்கு முன், கோயம்பேடிற்கு சவாரிக்கு வந்த கணேசனை, மர்ம கும்பல் ஓட ஓட விரட்டிய, ஹோட்டலுக்குள் புகுந்து வெட்டியது. பலத்த காயமடைந்தவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்தனர். இந்த நிலையில், கொளத்துாரைச் சேர்ந்த விக்னேஷ், 28, சின்ன ஜீவா, 20, சீனிவாசன், 19, பெரிய கருப்பு, 20, மற்றும் முத்தையா, 24, ஆகிய ஐந்து பேர், கோயம்பேடு போலீசில் நேற்று சரணடைந்தனர். விசாரணையில், சரணடைந்த ஐந்து பேரும் கணேசனின் முன்னாள் கூட்டாளிகள் என்பதும், கருத்து வேறுபாடு காரணமாக, கணேசன் பிரிந்ததும் தெரிய வந்தது. இவர்களின் குற்றச்செயல்கள் குறித்து, கணேசன் போலீசில் கூறியுள்ளார். சமீபத்தில் விக்னேஷை போலீசார் கைது செய்ததாக தெரிகிறது. ஜாமினில் வெளிவந்த விக்னேஷ், கணேசன் மற்றும் அவரது கூட்டாளியான கொளத்துாரில் உள்ள சிலரையும் வெட்டியது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
11-Oct-2025