உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அறக்கட்டளைக்கு தானமாக தந்த இடம் அபகரித்து மிரட்டிய ஐவர் கைது

அறக்கட்டளைக்கு தானமாக தந்த இடம் அபகரித்து மிரட்டிய ஐவர் கைது

சென்னை, புரவைாக்கம், பெரம்பூர் பேரக்ஸ் சாலையை சேர்ந்தவர் முகம்மது அலாவூதின்,75; புரசைவாக்கம் மதரஸதுார் ரப்பானியா டிரஸ்ட்டின் நிறுவனர் மற்றும் முதல்வர்.புளியந்தோப்பு துணை ஆணையரிடம் இவர் அளித்த புகார் மனு:வேப்பேரியை சேர்ந்த எஸ்.கே.அப்துல்முஜீப் என்பவருக்கு சொந்தமான, ஸ்ட்ரான்ஸ் சாலையில் உள்ள இடத்தை, இஸ்லாமிய மார்க்கத்திற்காக, எனக்கு 2005ல் தானமாக கொடுத்தார். கடந்த 13ம் தேதி, ஓட்டேரியை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ்., அனுதாபியான சலாவுதீன், அப்துல் ரஹீம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நபர்கள், தானாமாக பெற்ற இடத்தில் அத்துமீறி நுழைந்து, கட்டடத்தின் பூட்டை உடைத்து, வேறு பூட்டு போட்டு விட்டு சென்றனர். நியாயம் கேட்டு சென்ற போது, கத்தியை காட்டி மிரட்டுகின்றனர்.'குண்டு வெடிப்பு வழக்கில் சிறைக்கு சென்று வந்தவன் நான், மதரஸாவை குண்டு வைத்து தகர்ப்பேன்' என, சலாவுதீன் மிரட்டினார். சொத்தை மீட்டு, மிரட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு புகாரில் அவர் கூறியுள்ளார்.வழக்குப்பதிவு செய்த ஓட்டேரி போலீசார், சலாவுதீன்,30, அப்துல் ரஹிம்,40, முகமது ரஹிம்,40, சதாம்,27, அக்பர் பாஷா, 40 ஆகிய ஐவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சவுருதீன், 40, உள்ளிட்ட 10 பேரை தேடி வருகின்றனர். பலர் ஐ.எஸ்.ஐ.எஸ்., அனுதாபிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ