மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: சிவகங்கை..
26-Jul-2025
சென்னை, சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய, வந்தடைய வேண்டிய விமானங்கள் ஆறு மணி நேரம் தாமதத்தால் பயணியர் தவித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு டில்லி புறப்பட வேண்டிய விமானம், ஆறு மணி நேரம் தாமதமாக, 6:50 மணிக்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் இருந்து காலை 6:00 மணிக்கு ஹைதராபாத் செல்லும் விமானம், காலை 8:00 மணிக்கு மும்பை செல்லும் விமானம், காலை 8:50, 9:50 மணிக்கு, டில்லி செல்லும் விமானங்கள், துாத்துக்குடிக்கு காலை 10:10, பகல் 1:00 மணிக்கு செல்லும் விமானங்கள் மூன்று மணி நேரம் தாமதமாக புறப்பட்டன. இதனால், மற்ற நகரங்களில் இருந்து சென்னைக்குவர வேண்டிய விமானங்களும் ஆறு மணி நேரம் தாமதமாக வந்து தரையிறங்கின. இதனால், பயணியர் மிகுந்த சிரமம் அடைந்தனர். சில நாட்களாக, சென்னை விமான நிலையத்தில், சில மாதங்களாக விமானங்கள் ரத்து மற்றும் தாமதம் போன்ற சம்பவங்கள் விஸ்வூபம் எடுத்து வருகிறது. **
26-Jul-2025