உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கொச்சிக்கு மீண்டும் விமான சேவை

கொச்சிக்கு மீண்டும் விமான சேவை

சென்னை, சென்னையில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு தற்போது, 'இண்டிகோ' விமான நிறுவனம், தினசரி சேவைகளை வழங்கி வருகிறது. இந்த மார்க்கத்தில் செல்லும் பயணியர் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து கொச்சிக்கு தினசரி விமானங்களை இயக்க, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி விமான சேவைகள் அக்., 26ம் தேதி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விபரங்களை airindiaexpress.comஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை