கால்பந்து டி.ஏ.வி., பள்ளி வெற்றி
சென்னை:தி.நகரில் இயங்கும் அக் ஷார் அர்போல் சர்வதேச பள்ளி சார்பில், கேடமவுன்ட் சுழல் கோப்பைக்கான கால்பந்து போட்டிகள், மூன்று நாட்கள் நடந்தன.பள்ளிகள் இடையேயான 14 வயது பிரிவில், இரு பாலருக்கும், 10 வயது பிரிவில், சிறுவர்களுக்கு மட்டும் போட்டிகள் நடந்தன.இப்போட்டியில், 37 பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில், 10 வயது ஆண்களுக்கான போட்டியில், சோழிங்கநல்லூர் 'கேம்பஸ் கே' பள்ளி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.அதேபோல், 14 வயது பெண்கள் பிரிவில், நாவலூர் கே.சி., பள்ளி அணியும், ஆண்கள் பிரிவில் முகப்பேர் டி.ஏ.வி., பள்ளி அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றன.