உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நடைபாதை கட்டும் பணி அண்ணா நகரில் முடக்கம்

நடைபாதை கட்டும் பணி அண்ணா நகரில் முடக்கம்

அண்ணா நகர்:அண்ணா நகர் மண்டலத்தில், 94 - 108 வார்டுகள் உள்ளன. இங்குள்ள அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபாதை சீரமைக்கும் பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. அண்ணா நகர் மேற்கு, இரண்டாவது அவென்யூ விரிவு பகுதியில், பழைய நடைபாதை கற்களை உடைத்து, சாலையோரம் போடப்பட்டன. தற்போது வரை அவை அப்படியே மண்ணோடு மண்ணாக கிடக்கின்றன; புதிதாக நடைபாதை அமைக்கும் பணியும் நடக்கவில்லை.அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு, உடைக்கப்பட்ட நடைபாதை கழிவுகள் இடையூறாக இருக்கின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி