மேலும் செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு கொட்டிவாக்கத்தில் அகற்றம்
02-Jul-2025
கொளத்துார், ஜூலை 18-கொளத்துாரில் நடைபாதை ஆக்கிரமிப்பு கணக்கெடுக்கும் பணி, நேற்று துவங்கியுள்ளது.கொளத்துார் பூம்புகார் நகரில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின்படி, நடைபாதைகள் அழகுப்படுத்தப்பட்டன.ஆனால் அந்த பகுதி வியாபாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதன் அடிப்படையில் பூம்புகார் நகர் பிரதான சாலையில் நேற்று, கொளத்துார் தாலுகா நில அளவையர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் நடைபாதை மற்றும் சாலைகளை அளவீடு செய்தனர்.அளவீடு குறித்த விபரங்களை சரிபார்த்து, ஆக்கிரமிப்புகளை அடுத்த மாதம் அகற்ற அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.
02-Jul-2025