உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்னாள் தலைமை செயலர் சங்கர் மறைவு

முன்னாள் தலைமை செயலர் சங்கர் மறைவு

சென்னை:தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலர் பி.சங்கர் மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழக அரசின் தலைமை செயலராக, 2001 ஜூன் 1 முதல் 2002 ஜூன் 6 வரை பணியாற்றியவர் பி.சங்கர். கடந்த 1966 ஜூலை 2ல் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்றார். தமிழகத்தை சேர்ந்தவர். ஆரம்பத்தில் செய்யார், திருப்பத்துார் உதவி கலெக்டராக பணியாற்றினார். அதன்பின், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை பொது மேலாளர், கைத்தறி துறை இயக்குனர், திருச்சி கலெக்டர், சமூக வளத்துறை இயக்குனர், மத்திய தொழில்துறை இணை வளர்ச்சி கமிஷனர், கைத்தறி துறை இணை செயலர், தமிழ்நாடு மின் வாரிய தலைவர், தொழிலாளர் நலத்துறை செயலர், டி.என்.பி.எஸ்.சி., தலைவர், வெளியுறவுத்துறை கூடுதல் செயலர், மத்திய திட்டக்கமிஷன் செயலர், மத்திய விழிப்புணர்வு கமிஷனர் என, பல்வேறு பதவிகளை வகித்தார்.கடந்த 2002 செப்.,3 பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, 3, கில்கிறிஸ்ட் அவின்யூ, ஹாரிங்கடன் சாலை, சேத்துபட்டு, சென்னை என்ற முகவரியில் வசித்து வந்தார். நேற்று காலை 7:28 மணிக்கு, சங்கர், 82, இயற்கை எய்தினார். அவரது இறுதி சடங்கு நாளை மாலை 3:00 மணிக்கு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடக்க உள்ளது.அவரது மறைவுக்கு, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை