உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கட்டட பணிக்கு அடிக்கல்

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் கட்டட பணிக்கு அடிக்கல்

சென்னை, சென்னை, கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில், 330 படுக்கை வசதிகளுடன் கூடிய மூன்று பிளாக்குகளை கட்டுவதற்கான பணிகளை, அடிக்கல் நாட்டி, அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: இந்த மருத்துவமனையில், இடைநிலை பராமரிப்பு மையம், காந்த சக்தியின் மூலம் மூளையைத் துாண்டும் நவீன சிகிச்சை ஆகியவற்றுக்கு, 37 கோடி ரூபாயில், 88,000 சதுரடியில் ஆறு தளங்களுடன் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மேலும், 5 கோடி ரூபாயில், சிகிச்சைக்கான மருத்துவ கருவிகள் செய்யப்பட உள்ளன. இந்த ஒப்புயர்வு மையத்தை, விரைவில் முதல்வர் ஸ்டாலின் திறந்த வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை