உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்கு மேம்பால ரயில் நிலையங்கள் மெட்ரோவுடன் இணைப்பு துவக்கம்

நான்கு மேம்பால ரயில் நிலையங்கள் மெட்ரோவுடன் இணைப்பு துவக்கம்

சென்னை, 'ஆதம்பாக்கம் உட்பட நான்கு மேம்பால ரயில் நிலையங்கள் அருகில், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது' என, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் இரண்டாம் கட்டமாக, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் - சோழிங்கநல்லுார், மாதவரம் - சிறுசேரி சிப்காட் என மூன்று வழித்தடங்களில், 116 கி.மீ., மெட்ரோ ரயில் பாதை, ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போதுள்ள பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், ஏற்கனவே இருக்கும் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வேளச்சேரி மேம்பால ரயில் நிலையங்களில் உள்ள திருவான்மியூர், இந்திராநகர், ஆதம்பாக்கம், தரமணி அருகில், மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. ஆதம்பாக்கத்தில், 50 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன. மின்சார, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயணியர் வந்து செல்ல வசதியாக, ஸ்கைவாக், எஸ்கலேட்டர்கள், லிப்ட்கள், நடை மேம்பாலம், வாகன நிறுத்தங்களும் கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளில், அனைத்து பணிகளும் முடித்து, மெட்ரோ ரயில் சேவை துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ethiraj
ஆக 30, 2025 08:06

Velachery thomas mount MRTS will go in guiness book of records


Vignesh Sivaram A G
ஆக 29, 2025 18:39

இது மட்டும் இல்லை.. ஆவடி, அம்பத்தூர், குரோம்பேட்டை, தாம்பரம், கிளாம்பாக்கம் ரயில் நிலையங்களும் மெட்ரோவுடன் இணைய வேண்டும்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை