உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரியை தாக்கி போன் பறிப்பு சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

வியாபாரியை தாக்கி போன் பறிப்பு சிறுவன் உட்பட நான்கு பேர் கைது

ஏழுகிணறு, ஏழுகிணறு, இருசப்பன் தெருவைச் சேர்ந்தவர் சிவசாமி, 65. இவர், கொண்டித்தோப்பில் பழ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 23ம் தேதி இரவு பழ வியாபாரம் முடித்து, சிவசாமி கடையில் துாங்கினார். அதிகாலை 2:00 மணியளவில் கடைக்கு வந்த நான்கு வாலிபர்கள், சிவசாமியை தாக்கி, மொபைல் போனை பறித்து சென்றனர்.இது குறித்து சிவசாமி அளித்த புகாரின்படி, ஏழுகிணறு போலீசார் வழக்கு பதிந்து கொருக்குப்பேட்டை, மீனாம்பாள் நகரைச் சேர்ந்த முகமது ஷெரிப், 19, ஆனந்தகுமார், 18, பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த நாகராஜ், 19, மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து, நேற்று மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.முகமது ஷெரிப், ஆனந்தகுமார் மீது தலா ஒரு வழக்கும், நாகராஜ் மீது இரண்டு திருட்டு வழக்கும், சிறுவன் மீது போக்சோ உட்பட நான்கு குற்ற வழக்குகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ