உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான்காவது டிவிஷன் கிரிக்கெட் மில்கிவே - கேலக்ஸி டிரா

நான்காவது டிவிஷன் கிரிக்கெட் மில்கிவே - கேலக்ஸி டிரா

சென்னை, நான்காவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டியில், மில்கிவே சி.சி., - கேலக்ஸி சி.சி., அணிகளுக்கு இடையிலான ஆட்டம், 'டிரா'வில் முடிந்தது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பல்வேறு டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள், நகரில் பல மைதானங்களில் நடக்கின்றன. நேற்று முன்தினம் மேடவாக்கம் சுமங்கலி மைதானத்தில் நடந்த நான்காவது டிவிஷன் ஆட்டத்தில், மில்கிவே சி.சி., மற்றும் கேலக்ஸி சி.சி., அணிகள் மோதின. ஆட்டம், 45 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த கேலக்ஸி சி.சி., 44.1 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 149 ரன்களை அடித்தது. அடுத்து பேட்டிங் செய்த, மில்கிவே சி.சி., அணி, 31.2 ஒவர்களில் ஆல் அவுட் ஆகி, 149 ரன்கள் எடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது. கேலக்ஸி வீரர் யுவராஜ் ஏழு விக்கெட் எடுத்து, 39 ரன்களை கொடுத்தார். பூந்தமல்லி வெங்டேஸ்வரர் கல்லுாரியில் நடந்த மற்றொரு ஆட்டத்தில், சுந்தர் சி.சி., அணி, 44.3 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி, 139 ரன்களை அடித்தது. அடுத்து விளையாடிய, வெங்கடேஸ்வரா சி.சி., அணி, 44 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து, 12 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியடைந்தது. சுந்தர் சி.சி., வீரர் ஸ்ரீ ஹேமன் விக்னேஷ் ஏழு விக்கெட் எடுத்து, 42 ரன்களை கொடுத்து வெற்றிக்கு கைக்கொடுத்தார். **


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !