உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கமிஷனர் பெயரில் மோசடி முயற்சி

கமிஷனர் பெயரில் மோசடி முயற்சி

சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி, சைபர் கிரைம் மோசடி முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.மோசடி முயற்சியில் ஈடுபட்டோர், மொபைல் போன் வாட்ஸாப் - டி.பி.,யில் கமிஷனரின் புகைப்படத்தை வைத்துள்ளனர். அதன் வாயிலாக பண மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சென்னை நபர் ஒருவர், காவல் துறை 'எக்ஸ்' தள பக்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி முயற்சி தொடர்பாக, சென்னை போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை