உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி

சென்னை பல்கலையில் 181 பேருக்கு இலவச கல்வி

சென்னை, சென்னை பல்கலை, 181 மாணவ - மாணவியருக்கு இலவச கல்விக்கான ஆணைகளை வழங்கியுள்ளது.இதுகுறித்து, பல்கலை பதிவாளர் ரீட்டா ஜான் வெளியிட்டுள்ள அறிக்கை:பொருளாதாரத்தில் பின்தங்கியோர், கைவிடப்பட்டோர், விதவையரின் குழந்தைகள், முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ளிட்ட மாணவ - மாணவியருக்கு, இளநிலை பட்டப்படிப்பை உறுதிசெய்யும் வகையில், சென்னை பல்கலை சார்பில், 15 ஆண்டுகளாக, இலவச கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்த வகையில், இந்தாண்டு சிறப்பு பிரிவில் 51 பேர்; முதல் பட்டதாரிகள் 60 பேர்; தகுதி பிரிவில் 70 பேர் என, 181 மாணவ - மாணவியர், இலவச கல்விக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை