மேலும் செய்திகள்
பக்கவாத பாதிப்புக்கு இலவச முகாம்
26-Oct-2024
சென்னை, ராமச்சந்திரா மருத்துவமனை சார்பில், திருவான்மியூரில் நாளை இலவச மருத்துவ முகாம் நடக்க உள்ளது. இதில், மார்பக புற்று நோய்க்கான, இலவச மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.இதுகுறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:சென்னை, திருவான்மியூரில் உள்ள நகர்ப்புற மருத்துவ பயிற்சி மையத்தில், நாளை காலை 9:30 முதல் 1:30 மணி வரை, இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடக்க உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதயம் நலம், மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவம், முடநீக்கியல், குழந்தைகள் நல மருத்துவம், காது - மூக்கு - தொண்டை, நெஞ்சக மற்றும் காசநோய், சரும நோய், கண் மற்றும் பல் மருத்துவ துறை டாக்டர்களிடம் சிகிச்சை பெறலாம்.மேமோகிராம், இ.சி.ஜி., - எக்கோ உள்ளிட்ட அடிப்படை பரிசோதனை இலவசமாக செய்யப்படும். குறிப்பிட்ட சில மருந்துகளும் வழங்கப்படும். நோயாளிகள் தங்களுடைய மருத்துவப் பதிவேடுகளை கொண்டு வருவது அவசியம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
26-Oct-2024