உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழுதிவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

புழுதிவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்

புழுதிவாக்கம், புழுதிவாக்கத்தில், நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு, வேளச்சேரி அரிமா சங்கம், உள்ளகரம், புழுதிவாக்கம் குடியிருப்போர் நலச்சங்கம் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாம் நடத்தின. புழுதிவாக்கம், பாலாஜி நகர், 19வது தெரு, குழந்தைகள் பூங்காவில், காலை 8:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடந்த இந்த முகாமில், 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர். இதில், ரத்த அழுத்தம், சீரற்ற சர்க்கரை, பல், கண், காது பரிசோதனைகள் உட்பட, 17 விதமான பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. இம்முகாமில், தி.மு.க.,வைச் சேர்ந்த 186வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன், 185வது வார்டு கவுன்சிலர் ஷர்மிளா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை