மேடவாக்கம் அரசு மருத்துவமனையில் இலவச பெரிடோனியல் டயாலிசஸ் சிகிச்சை
மேடவாக்கம், மேடவாக்கத்தில், தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில், மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம் செயல்படுகிறது.இங்கு, இரு சிறுநீரகங்களும் முற்றிலுமாக செயலிழந்தோருக்கு, 'மக்களைத் தேடி மருத்துவம்' திட்டத்தின் கீழ் பெரிடோனியல் டயாலிசஸ் சிகிச்சை, அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று அளிக்கப்படுகிறது.இதுகுறித்து, மருத்துவமனை அதிகாரி கூறியதாவது:ஒரு நோயாளிக்கு, தினம் மூன்று முறை என, தற்போது 10 நோயாளிகளுக்கு இந்த மையத்தில் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.டயாலிசஸ் தேவைப்படும் நோயாளிகள், ராஜிவ்காந்தி அரசு மருத்துவனையில், சிறுநீரக மருத்துவரின் அறிவுறுத்தல் கடிதம், உள்ளூர் முகவரி அடையாள அட்டையுடன், மையத்திற்கு நேரில் வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.