மேலும் செய்திகள்
இலவச ஒயரிங் பயிற்சி நாளை நேர்காணல்
01-Sep-2025
கண்ணகிநகர், தமிழக அரசு மற்றும் முதல் தலைமுறை கற்றல் மையம் இணைந்து, ஆண்களுக்கான இலவச தொழில் பயிற்சிகள் வழங்க உள்ளன. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையமும் இணைந்து, ஆண்களுக்கான இலவச திறன் பயிற்சியை நடத்துகின்றன. இதில், 'ஏசி' மெக்கானிக், மின்வயரிங், மோட்டார் ரீவைண்டிங், வாகன மெக்கானிக், வாகன ஓட்டுனர் பயிற்சி, வெல்டிங், வீட்டு உபயோக பொருட்கள் சேவை மற்றும் பராமரிப்பு, சி.என்.சி., இயந்திர இயக்கம் உள்ளிட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. பயிற்சி, 32 நாள் முதல் 83 நாட்கள் வரை வழங்கப்படும். பயிற்சிக்கு ஏற்ப, 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த, 18 முதல் 40 வயது வரையுடையோர் பங்கேற்கலாம். பயிற்சியின்போது தங்கும் வசதி, உணவு, ஊக்கத்தொகை, அரசு சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்புக்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சுற்றுவட்டார பகுதியில் வசிப்போர், இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 92800 86991 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, முதல் தலைமுறை கற்றல் மையம் தெரிவித்துள்ளது.
01-Sep-2025