உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இலவச வாலிபால் பயிற்சி 150 பேர் உற்சாக பங்கேற்பு

இலவச வாலிபால் பயிற்சி 150 பேர் உற்சாக பங்கேற்பு

சென்னை, நெல்லை பிரண்ட்ஸ் வாலிபால் கிளப் சார்பில், 41வது ஆண்டிற்கான கோடைக்கால இலவச வாலிபால் பயிற்சி முகாம், ஏப்., 28ல் துவங்கி, நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இம்முகாம், எழும்பூர் ராதாகிருஷ்ணன் அரங்கில் உள்ள வாலிபால் விளையாட்டு மைதானத்தில் நடத்தப்பட்டது. இதில், 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட, 150க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் உற்சாகமாக பங்கேற்று பயனடைந்தனர். பங்கேற்றோருக்கு, தினமும் ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. இறுதி நாளான நேற்று முன்தினம் மாலை, சிறுவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.நிகழ்வில், மாநில வாலிபால் சங்கத்தின் வாழ்நாள் தலைவர் அர்ஜுன் துரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் சுஜாதா உள்ளிட்டோர் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை