உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்

நங்கநல்லுார், வேளச்சேரியில் இலவச யோகா வகுப்புகள்

சென்னை, சத்தியானந்த யோகா மையம் சார்பில், நான்கு வார இலவச யோகா வகுப்புகள், பிப்., 1ல் வேளச்சேரியிலும், பிப்., 2ல், நங்கநல்லுாரிலும் துவங்குகிறது.உடல், மன வலிமையை அதிகப்படுத்தும் வகையில், சத்யாநந்த யோகா மையத்தின், சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, பிப்., 1ல் வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவிலும், பிப்.,2ல் நங்கநல்லுார், லட்சுமிநகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹாலிலும் இலவச யோகா வகுப்புகள் துவங்கி, நான்கு வாரங்கள் நடக்கிறது.இப்பயிற்சி வகுப்புகள் வார நாட்களில் தினமும் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு 94450 51015 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி