பழ வியாபாரியின் மண்டை உடைப்பு
ஆவடி, பட்டாபிராம், தண்டுரை தெற்கு பஜார் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ், 55; பழ வியாபாரி. இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் பாபு, 50, என்பவரிடம், 2,000 ரூபாய் கடன் வாங்கியது தொடர்பாக, இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு, தங்கராஜ் மது போதையில் இருந்தபோது, பாபு அவரது வீட்டிற்கு சென்று கடனை திருப்பி கேட்டுள்ளார். அவரை, தங்கராஜ் அவதுாறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாபு, அவரது மனைவி அம்மு மற்றும் மகனுடன் சேர்ந்து, தங்கராஜை கல்லால் தாக்கியுள்ளனனர்.இதில், பலத்த காயம் அடைந்த தங்கராஜ், ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தலை மற்றும் முகத்தில் ஐந்து தையல் போடப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிந்து, அம்முவை, 50, நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபு மற்றும் அவரது மகனை தேடி வருகின்றனர்.