உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது

பெயிண்டரை வெட்டிய தலைமறைவு ரவுடி கைது

வியாசர்பாடி,சென்னை, வியாசர்பாடி திடீர் நகரை சேர்ந்தவர் கோபி, 29; பெயிண்டர். கடந்த பிப்., 23ல் வீட்டின் அருகே நின்ற கோபியை, முன் விரோதத்தில் நான்கு பேர், தலையில் வெட்டிவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த கோபி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட விநாயகம், 23; விஜயன், 25; முரளி, 22 ஆகியோரை ஏற்கனவே கைது செய்தனர். வழக்கில் தலைமறைவாக இருந்த, மூலக்கொத்தளத்தை சேர்ந்த ரவுடி ஜங்கிலி ஆகாஷ், 23 நேற்று கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !