உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போலீசாரை கல் வீசி தாக்கிய சூதாட்ட கும்பல்

போலீசாரை கல் வீசி தாக்கிய சூதாட்ட கும்பல்

சென்னை, பிப். 5-திருவல்லிக்கேணி, சிவானந்தா சாலையில், போலீசார் நேற்று, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, குதிரை லாயம் அருகே, ஐந்து பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதை பார்த்தனர். சூதாடியவர்களை கைது செய்ய முயன்ற போலீசாரை, கல் வீசி தாக்கி அவர்கள் தப்ப முயன்றனர். இருப்பினும், சூதாட்ட கும்பலைச் சேர்ந்த,திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தவுபீக் அகமது, 23, சாலிக்கார்ஸ், 25, இம்மானுவேல், 23, அப்துல் ரஹ்மான், 23, முகமது அஸ்ரப், 23 ஆகிய ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்டோரிடம் இருந்து, 300 கிராம் கஞ்சா, 18,000 ரொக்கம், சீட்டு கட்டுகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ