மொபைல் போன் பறிக்கும் கும்பல்: பூந்தமல்லியில் அச்சம்
பூந்தமல்லி, பூந்தமல்லி டிரங்க் சாலையில் கரையான்சாவடி பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி, பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்.இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த பேருந்து நிறுத்தத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பேருந்தில் ஏறும் பயணியரிடம் மர்ம நபர்கள், மொபைல் போன் பறித்து செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து பயணியர் கூறியதாவது:கரையான்சாவடி பேருந்து நிறுத்தத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல், ஏற்கனவே அவதிக்குள்ளாகி வருகிறோம்.இந்த நிலையில் மொபைல் போன் பறிக்கும் மர்ம நபர்களால் அச்சமடைந்துள்ளோம். கடந்த 10 நாட்களில் 15 மொபைல் போன்களை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.இது குறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. மர்ம நபர்களை போலீசார் விரைந்து கைது செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.