உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொது -- மோசடிக்கு உடந்தை 2 வாலிபர்கள் கைது 

பொது -- மோசடிக்கு உடந்தை 2 வாலிபர்கள் கைது 

ஆவடி :அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 64. கடந்த ஜனவரி மாதம், இவரது மொபைல் போன் எண்ணிற்கு, ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டிருந்த எண்ணை ராமசாமி தொடர்பு கொண்டு பேசியபோது, 'ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்' என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதை நம்பிய அவர், மர்ம நபர்கள் தெரிவித்த வங்கி கணக்குகளுக்கு பல தவணைகளாக 1.04 கோடி ரூபாய் வரை அனுப்பியுள்ளார். இது குறித்து பிப்., மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். வங்கி கணக்குகளை வைத்து விசாரித்த போலீசார், சென்னை பாரிமுனை பகுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கும்பா வெங்கடேசன், 30, மங்களூரைச் சேர்ந்த கிராபிக் டிசைனர் அல்தாப் உசைன், 22, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு, மோசடி நபர்களுக்கு தங்களின் வங்கி கணக்கை கொடுத்து உதவியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து லேப்டாப், இரண்டு மொபைல் போன் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !