பொது - குமரகோட்டம் முருகன் கோவில் தேரின் குடை சாய்ந்ததால் பீதி
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், குமரகோட்டம் முருகன் கோவிலில், வாரந்தோறும் நடக்கும் வெள்ளி தேரோட்ட நிகழ்வு, நேற்று முன்தினம் இரவு 7:45 மணிக்கு நடந்தது.தேரில், வள்ளி, தெய்வானையருடன் மலர் அலங்காரத்தில் முருகப் பெருமான் எழுந்தருளினார்.பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றபோது, தேரின் உச்சியில் இருந்த குடை திடீரென சாய்ந்ததால், பக்தர்கள் பீதி அடைந்தனர். எனினும் கீழே விழாததால், யாருக்கும் பாதிப்பு இல்லை.காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவன் கூறுகையில், ''கோவிலில் திருப்பணி நடந்து வருகிறது. கட்டுமானப் பணியை மறைப்பதற்காக கட்டப்பட்டிருந்த பச்சை நிற துணி, தேரின் குடையில் சிக்கியுள்ளது. இதனால், குடை சாய்ந்ததே தவிர முற்றிலும் விழவில்லை. தேர் குடை உடனடியாக சீரமைக்கப்பட்டது,'' என்றார்.