விதிமீறி கட்டிய வணிக கட்டடத்திற்கு சீல் வைப்பு
சென்னை, தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கத்தில் ஜோசியர் தெரு உள்ளது. இங்கு ஆர்.சி., டவர்ஸ் என்ற பெயரில் ஏழு கடைகள் அடங்கிய வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகம், விதிமீறி கட்டடப்பட்டுள்ளது எனவும், அதை பூட்டி 'சீல்' வைக்கவும், மாநகராட்சி அதிகாரிகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று, ஏழு கடைகளை பூட்டி, 'சீல்' வைத்ததுடன், வணிக வளாகத்திற்கும் சீல் வைத்தனர்.