உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருட்டு

வீட்டு பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருட்டு

திருவேற்காடு, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 22 சவரன் நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவேற்காடு, பெருமாளகரம், பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா, 45. போரூரில் உள்ள கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வருகிறார். விஜயா, வழக்கம்போல் நேற்று காலை பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில், விஜயாவின் மகன் அரவிந்த், 19, கல்லுாரி முடிந்து, நேற்று மாலை வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, படுக்கையறை பீரோவில் இருந்த, 22 சவரன் நகை திருடு போனது தெரிந்தது. இது குறித்து, தாய்க்கு தகவல் அளித்தார். பின், திருவேற்காடு போலீசில் விஜயா புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள 'சிசிடிவி' காட்சிகளின்படி, விஜயா வீட்டில் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவத்தால், அப்பகுதிவாசிகள் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை