மேலும் செய்திகள்
காமாட்சியம்மன் திருக்கல்யாணம்
18-May-2025
ஸ்ரீபெரும்புதுார், ஸ்ரீபெரும்புதுார் அருகே, குண்டுபெரும்பேடு கிராமம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அஞ்சநேயர் கோவிலில், ஐம்பொன்னாலான ராமர், சிதை, லட்சுமணன் சிலைகள் உள்ளன. இக்கோவிலை, அதே பகுதியைச் சேர்ந்த சின்னமன்னார் என்பவர் பராமரித்து வருகிறார்.நேற்று முன்தினம் காலை, சின்னமன்னார் வழக்கம்போல கோவிலுக்கு சென்றபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த லட்சுமணன் சிலை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இந்நிலையில், அதே பகுதியில் உள்ள பெண்டாலம்மன் கோவில், செல்லியம்மன் கோவில்களின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்யப்பட்டு உள்ளது.அதேபோல, ஒட்டன்காரணை கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் மற்றும் சிவன் கோவில் பூட்டை உடைந்து, 3 அடி கத்தி, குத்து விளக்கு, மைக்செட், ஆம்ப்ளிபயர், மின்சார அடுப்பு உள்ளிட்டவை திருடப்பட்டு உள்ளன.இது குறித்து, ஸ்ரீபெரும்புதுார் போலீசில் புகார் அளித்ததையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., கீர்த்திவாசன் ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வருகிறார். இச்சம்பவங்கள் ஸ்ரீபெரும்புதுாரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
18-May-2025