டொயோட்டா கார் வாங்கினால் 2 கிராம் தங்க நாணயம் இலவசம்
சென்னை,'எபிக் டொயோட்டா டீலர்ஷிப்' நிறுவனத்தின் முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, இம்மாதம், 'டொயோட்டா' கார்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 2 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னையில், கடந்த ஆண்டு துவங்கிய, 'எபிக் டொயோட்டா டீலர்ஷிப்' நிறுவனம், இம்மாதம் அதன் முதலாம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட உள்ளது. இதையொட்டி, அக்டோபர் மாதத்தில், குறிப்பிட்ட சில, 'டொயோட்டா' வாகனங்களை பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, 2 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. கடந்த 1ம் தேதி துவங்கிய சிறப்பு சலுகையை, வரும் 31 வரை பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 92800 94128 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.