உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ‘வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெறுங்கள்’

‘வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெறுங்கள்’

சென்னை: ‘‘வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து பெற வேண்டும்,’’ என, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆய்வு கூட்டம், நகராட்சி நிர்வாகத்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி தலைமையில், தலைமை செயலகத்தில் இன்று (அக்.,30) நடந்தது. அப்போது, செயலர் ககன்தீப்சிங்பேடி பேசியதாவது: சென்னை மாநகாரட்சியில் திடக்கழிவுகளை உருவாகும் இடத்திலேயே ஈரக்கழிவுகள், உலர் கழிவுகள், சுகாதாரத் கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என, தனித்தனியாக பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில், தீவிர துாய்மை பணி செய்ய வேண்டும். பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்கில் நடைபெறும், அறிவியல் ரீதியாக குப்பை பிரித்தெடுக்கும், ‘பயோ மைனிங்’ பணியை விரைவுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ