உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாலம் நிறுவனத்திற்கு நன்கொடை

பாலம் நிறுவனத்திற்கு நன்கொடை

சென்னை:பாலம் தொண்டு நிறுவனத்திற்கு, குவைத் 'பிரன்ட் லைனர்ஸ்' அமைப்பு இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ், குவைத்தில் பணிபுரிகிறார். அவர், அங்கு பணிபுரியும் இந்தியர்களை ஒருங்கிணைத்து, 'பிரன்ட் லைனர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் நிதி திரட்டி, இந்தியாவில் பல்வேறு சமூகப் பணிகளுக்கு உதவி வருகிறார்.கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல், கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு வழங்கியுள்ளார். தற்போது, இந்த அமைப்பு, தமிழகத்தைச் சேர்ந்த பாலம் தொண்டு நிறுவனத்திற்கு, இரண்டு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை