உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கால் தடுக்கி கீழே விழுந்த சிறுமி பலி

 கால் தடுக்கி கீழே விழுந்த சிறுமி பலி

சென்னை: மாங்காடு அருகே மலையம்பாக்கம், சக்தி நகரை சேர்ந்த சதீஷ் மகள் ஷாலினி, 6. இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே தெருவில் விளையாடியபோது, எதிர்பாராத விதமாக கால் தடுக்கி கீழே விழுந்தார். இதில், சிறுமி ஷாலினிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின், சிறுமியை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ