உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மரக்கிளை விழுந்து சிறுமி காயம்

மரக்கிளை விழுந்து சிறுமி காயம்

வில்லிவாக்கம், சாலையோரத்தில் முறிந்து விழுந்த மரக்கிளையில் சிக்கி, சிறுமி காயமடைந்தார்.வில்லிவாக்கம், சிட்கோ நகர், நான்காவது பிரதான சாலையோரம் இருந்த மரம், நேற்று மாலை திடீரென முறிந்து விழுந்தது.அப்போது, அவ்வழியாக நடந்து சென்ற சிறுமி மீது பெரிய மரக்கிளை விழுந்து, அதன் அடியில் சிக்கிக்கொண்டார். அங்கிருந்தோர், மரக்கிளையை அப்புறப்படுத்தி சிறுமியை மீட்டனர்.சிறுமிக்கு தலையில் லேசான காயம் இருந்ததால், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதனால், அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வெகு நேரமாக மாநகராட்சி ஊழியர்கள் வராததால், அப்பகுதி மக்களே மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை