மேலும் செய்திகள்
நாளைய மின் தடை
05-Aug-2025
கே.கே.நகர், கே.கே.நகரில், காதலனை நையப்புடைத்த காதலியால் சலசலப்பு ஏற்பட்டது. அசோக் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 21. இவர், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த 21 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக, இரு வாரங்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், கார்த்திகேயன் தன் தாயுடன், நேற்று முன்தினம் மாலை கே.கே.நகர், பத்ரோ சாலையில் நடந்து சென்றார். அப்போது கார்த்திகேயனின் காதலி, அவரது சகோதரியுடன் அந்த வழியாக நடந்து வந்துள்ளார். அப்போது, அப்பெண் 'ஏன் பேசாமல் இருக்கிறாய்' என, காதலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே, இருவருக்கும் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த இளம் பெண், கீழே கிடந்த கட்டையால், காதலனை ஓட ஓட தாக்கியுள்ளார். கே.கே. நகர் போலீசார் இருவரிடமும் விசாரித்தனர். அப்போது, சமாதனமாக செல்வதாக கூறியதால், எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
05-Aug-2025