உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் மோதி சிறுமி கால் எலும்பு முறிவு

பைக் மோதி சிறுமி கால் எலும்பு முறிவு

சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில், அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியதில், சைக்கிளில் சென்ற சிறுமியின் கால் எலும்பு முறிந்தது. வேளச்சேரி, வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். அவரது மகள் சங்கமித்ரா, 10. அவர், சென்னை ஐ.ஐ.டி.,யில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில், ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். ஐ.ஐ.டி., வளாகம் வழியே சென்றபோது, அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம், சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுமி, குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுனர் மீது நடவடிக்கை கோரி, அவரது பெற்றோர், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவ இடத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து கண்டறிய முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை