உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பொன் புத்தாண்டு சிறப்பு பிரசாரம் ஜி.ஆர்.டி., ஜுவல்லர்சில் துவக்கம்

பொன் புத்தாண்டு சிறப்பு பிரசாரம் ஜி.ஆர்.டி., ஜுவல்லர்சில் துவக்கம்

சென்னை,தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிறுவனம், தள்ளுபடியுடன் கூடிய பொன் புத்தாண்டு சிறப்பு பிரசாரத்தை துவங்கியுள்ளது. ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ், அதன் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்லும் வகையில், இந்த தமிழ் புத்தாண்டிற்காக, 'பொன் புத்தாண்டு' என்ற சிறப்பு பிரசாரத்தை முன்னெடுத்துள்ளது.இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கும்போது, கிராமுக்கு, 75 ரூபாய் விலை குறைப்பு வழங்கப்படும். பழைய தங்கத்தை மாற்றும் போது, கிராமுக்கு, 75 ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். வைரம், அன் கட் வைர நகைகளின் மதிப்பில், 10 சதவீத தள்ளுபடி; வெள்ளி பொருட்கள் செய்கூலியில், 25 சதவீதம் தள்ளுபடி; வெள்ளி நகைகளின் எம்.ஆர்.பி., விலையில், 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இந்த பிரசார அறிமுக விழாவில், ஜி.ஆர்.டி., நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.அனந்தபத்மநாபன் கூறுகையில், ''புத்தாண்டு என்பது நம்பிக்கை, செழிப்பு மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு விழா. மக்களின் இந்த கொண்டாட்டத்தில் நாங்களும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை பெறுகிறோம்,'' என்றார். ஜி.ஆர்.டி., ஜுவல்லர்ஸ் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''புத்தாண்டு பிறப்பை வரவேற்கும் சிறப்பு நேரத்தில், எங்கள் புதிய நகை கலெக் ஷன்களை சிறப்பு சலுகைகளுடன் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை