மேலும் செய்திகள்
மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு
10-Oct-2025
உத்திரமேரூர் புதிய பேருந்து நிலையம் இழுபறி
13-Oct-2025
உத்திரமேரூர்: மன்னன்குடிசை கிராமத்தில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட, அரசு பேருந்து ஓப்பந்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, மன்னன்குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 40. உத்திரமேரூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில், ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன் தினம், அதிகாலை 4:00 மணியளவில், அதே பகுதியில் உள்ள வீடு ஒன்றில், தனியாக படுத்து உறங்கி கொண்டிருந்த, 45 வயது பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பெண்ணின் உறவினர்கள் சம்பவம் குறித்து, உத்திர மேரூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, உத்திரமேரூர் போலீசார், பாலகிருஷ்ணனை நேற்று கைது செய்தனர்.
10-Oct-2025
13-Oct-2025