உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீர் புகுந்து கணிணி பழுது அரசு இ – சேவை பணி பாதிப்பு

மழைநீர் புகுந்து கணிணி பழுது அரசு இ – சேவை பணி பாதிப்பு

தாம்பரம்: தாம்பரம் அரசு இ- – சேவை மையத்தில் மழைநீர் புகுந்ததால், கணிணி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுதடைந்துள்ளன. இதனால், பொதுமக்கள் சான்று பெற முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தின் பின்புறம், அரசு இ- – சேவை மையம் உள்ளது. இரு நாட்களுக்கு முன் பெய்த மழைநீர், இந்த மையத்தினுள் புகுந்தது. இதனால், அங்கிருந்த கணிணி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் பழுதடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, வருமானம், இருப்பிடம், ஜாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை பெற முடியாமல், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இ – சேவை மையம் இயங்காததால், தினமும் ஏராளமானோர் வந்து, ஏமாற்றத்துடன் செல்கின்றனர். பழுதடைந்த மின் சாதனங்களை சீரமைத்து, அரசு இ- – சேவை மையத்தை மீண்டும் முழுமையாக செயல்பட, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !