உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நியூ பிரின்ஸ் கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

நியூ பிரின்ஸ் கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

சென்னை, சென்னை, கவுரிவாக்கத்தில் உள்ள நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரியில், 13ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.அண்ணா பல்கலை அளவில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கான பட்டம் மற்றும் ரொக்க பரிசுகளை, 'இஸ்ரோ'வின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கி வாழ்த்தினார்.அவர் பேசியதாவது:கல்லுாரிக்கு வெளியில்தான், உங்களுக்கான உலகம் காத்திருக்கிறது. நீங்கள் விரும்பியது கிடைத்து, அதில் பெறுவது வெற்றியல்ல. கிடைத்ததில் வெற்றி அடைவதுதான், உண்மையான வெற்றி.உங்கள் முன்னாள் நிற்கும் எனக்கு, எதுவும் எளிதில் கிடைத்துவிடவில்லை. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியதால், 12 இந்திய செயற்கைக்கோள்களை உருவாக்கும் செயல் திட்ட இயக்குனராகவும், வரலாற்று சிறப்புமிக்க சந்திராயன் திட்டத்தில் பங்கு பெற்ற வாய்ப்பும் கிடைத்தது.இனி, தொழில்நுட்பங்கள் மாறிக்கொண்டே இருக்கும். அவற்றை கற்று, நீங்களும் மாற வேண்டும். உங்களின் பணி, நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன் அளிக்கட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், நியூ பிரின்ஸ் கல்வி குழுமங்களின் துணை தலைவர் நவீன் பிரசாத் வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி