ஜி.டி., ரயில் வருகை மாற்றம்
சென்னை, சென்னை சென்ட்ரல் - புதுடில்லி இடையே இயக்கப்பட்ட கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனும் ஜி.டி., விரைவு ரயில், இரு நகரங்களையும் இணைக்கும் முக்கிய ரயிலாக இருக்கிறது.வழக்கமாக, புதுடில்லியில் இருந்து தினமும் மாலை 4:10 மணிக்கு புறப்பட்டு, அடுத்த 2வது நாளில் அதிகாலை 4:25 மணிக்கு எழும்பூருக்கு வந்துவிடும்.இனி 35 நிமிடங்கள் தாமதமாக, காலை 5:00 மணிக்கு எழும்பூருக்கு வரும். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, ரயில்வே தெரிவித்துள்ளது.