உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிண்டி மெட்ரோ - ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேம்பாலம் 2 மாதங்களில் தயார்

 கிண்டி மெட்ரோ - ரேஸ்கோர்ஸ் சாலை நடைமேம்பாலம் 2 மாதங்களில் தயார்

சென்னை: 'கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ரேஸ்கோர்ஸ் சாலை செல்ல வசதியாக, நடைமேம்பாலம் கட்டும் பணிகள் இரண்டு மாதங்களில் முடியும்' என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில், கிண்டி ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது.தினமும், 65,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும், 98 விரைவு ரயில்கள் கடந்து செல்கின்றன. அருகில் மெட்ரோ, பேருந்து நிலையம் இருப்பதால், பயணியர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, அருகில் உள்ள ரேஸ்கோர்ஸ் சாலையை இணைக்கும் வகையில், புதிய நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே அமைக்கப்பட்ட துாண்களில், பாலம் இணைப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: கிண்டியில், ஏற்கனவே ஒரு மேம்பாலம் இருக்கும் வகையில், பின்புறத்தில் மெட்ரோவில் இருந்து வரும் பயணியர், நேரடியாக ரேஸ்கோர்ஸ் சாலைக்கு செல்ல, மற்றொரு நடைமேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. துாண்களில் பாலம் பொருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகள் அடுத்த இரண்டு மாதங்களில் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். இதையடுத்து, சென்னை மாநகராட்சி, மற்றொரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலை மற்றும் கிண்டி ஜி.எஸ்.டி., சாலையை இணைக்கும் எஞ்சியுள்ள பணிகளை மேற்கொள்ளும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ