உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு லவ் டார்ச்சர் ஜிம் பயிற்சியாளர் கைது

பெண்ணுக்கு லவ் டார்ச்சர் ஜிம் பயிற்சியாளர் கைது

அசோக் நகர், பெண்ணை காதலிக்கும்படி தொந்தரவு செய்து, புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய ஜிம் பயிற்சியாளரை, போலீசார் கைது செய்தனர்.மேற்கு மாம்பலத்தை சேர்ந்த, 28 வயது பெண், தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர், அசோக் நகரில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் சேர்ந்தபோது, அங்கு பயிற்சியாளர் ராஜ்குமார், 30, என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.அப்பெண்ணிடம், ராஜ்குமார் தனக்கு விவாகரத்தாகி தனியாக வசித்து வருதாக கூறி, சிறுகச் சிறுக, 1.10 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பின், அப்பெண்னை காதலிக்கும்படி தொந்தரவு செய்ததாக தெரிகிறது.இதையடுத்து, ராஜ்குமாரிடம் பழகுவதை அப்பெண் தவிர்த்துள்ளார். ஆத்திரமடைந்த ராஜ்குமார், பழகிய போது எடுத்த புகைப்படங்களை, இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.இதுகுறித்து, அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசில், அப்பெண் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து, மேற்கு சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜ்குமாரை கைதுசெய்து, அவரது மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை