நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் கைத்தறி, கைவினை பொருள் கண்காட்சி
சென்னை:'மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட்' மற்றும் 'ஸ்மார்ட் ஆர்ட் ஈவென்ட்ஸ்' இணைந்து, 'கலா சந்தே' எனும் பெயரில் நாட்டின் பாரம்பரிய கைத்தறி மற்றும் கைவினை பொருட்களின் விற்பனை கண்காட்சியை, எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியத்தில் துவங்கியது.கண்காட்சியை, 'பிக் பாஸ் - 8' பிரபலம் சவுந்தர்யா நஞ்சுண்டன் துவக்கி வைத்தார். 90க்கும் அரங்குகள் உள்ளன. வரும் 9ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கண்காட்சியை, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 வரை பார்வையிட்டு, பிடித்தமானவைகளை வாங்கி செல்லலாம்.குறிப்பாக, ஜவுளி, வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேற மாநிலங்களின் உள்ள திறமைமிகு கைவினைஞர்களின் படைப்புகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.இது குறித்து, 'மான்யா ஆர்ட் அண்ட் கிராப்ட்' நிறுவர் ஜெயந்த் நஸ்ரே மற்றும் 'ஸ்மார்ட் ஆர்ட் ஈவென்ட்ஸ்' நிறுவனர் சன்கீ கட்டாரியா ஆகியோர் கூறுகையில், ''இன்றைய வேகமான உலகத்திலும், கேஜேட்களின் யுகத்திலும், கைத்தறி மற்றும் கலை ஆர்வலர்கள், பாரம்பரிய ஜவுளி மற்றும் பழைய நெசவு நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டிய அவசியத்தை அதிகரித்துள்ளது. மேலும், மாயாஜால அதிசயங்களை, நெசவு செய்து வடிவமைக்கும் கைவினைஞர்களின் முயற்சி மற்றும் உள்ளார்ந்த திறமையை அங்கீகரிப்பதும் தான் எங்கள் நோக்கம்,'' என்றனர்.