இன்று இனிதாக (01.10.2024)
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில்மாத சிவராத்திரியை முன்னிட்டு அபிஷேகம் - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர். ஜெய் பிரத்யங்கிரா பீடம் மஹா சண்டி ஹோமம் - காலை 7:00 முதல் பகல் 12:00 மணி வரை. இடம்: மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம். துர்க்கை அம்மன் கோவில்ராகு கால வழிபாடு - மாலை 3:00 முதல். இடம்: துர்க்கை அம்மன் கோவில், ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை. குரு பூஜை விழாகண்ணப்ப சுவாமிகள் குருபூஜை விழா - காலை 10:00 மணி. இடம்: பகவான் மவுனகுரு கண்ணப்ப சுவாமிகள் ஜீவ சமாதி ஆசிரமம், காவாங்கரை. சொற்பொழிவுஅங்கரை பிரம்மஸ்ரீ ராமநாத அய்யர் என்டோமென்ட் விரிவுரை சார்பில், லலிதா சகஸ்ரநாம சொற்பொழிவு - மாலை 6:15 மணி. இடம்: சமஸ்கிருத கல்லுாரி, மயிலாப்பூர்.பொது கொலு கண்காட்சிநவராத்திரி பண்டிகையை முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி - காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணாசாலை. காந்தி விழாராமலிங்கர் பணி மன்றம் ஏ.வி.எம்., அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் 57ம் ஆண்டு அருட்பிரகாச வள்ளலார் மகாத்மா காந்தி விழா - மாலை 6:00 மணி. இடம்: முத்தமிழ் பேரவை, திருவாடுதுறை டி.ஆர்.ராஜரத்தினம் கலை அரங்கம், ராஜா அண்ணாமலைபுரம். முதியோர் தின விழாஹெல்ப் ஏஜ் இந்தியா நிறுவனம் சார்பில், தேசிய முதியோர் தினம் - காலை 10:00 முதல் மாலை 3:00 மணி வரை. இடம்: ஸ்ரீ குச்சாலாம்பாளம் திருமண மஹால், சேத்துபட்டு.