வேளச்சேரி ரயில்வே சாலையில் ஹெல்த் வாக்கத்தான்
சென்னை: சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் அசோசியேஷன் இணைந்து, வேளச்சேரி - தரமணி ரயில்வே சாலையில், 3.4 கி.மீ., துாரத்தில், 'கெட் பிட் சென்னை' என்ற 'ஹெல்த் வாக்கத்தான்' நிகழ்ச்சியை, நேற்று துவங்கின. இதில், நடைபயணம், மிதிவண்டி பயணம் நடந்தது. இதில் பங்கேற்றோருக்கு, அமைச்சர் சுப்பிரமணியன், பதக்கம், சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், கமிஷனர் குமரகுருபரன், துணை கமிஷனர் அதாப் ரசூல், கவுன்சிலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒவ்வொரு வாரமும், இந்த சாலையை, காலையில் 2 மணி நேரம், நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சிக்காக பொதுமக்கள் பயன்படுத்த மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.