உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உயர்ந்த குணங்களே ஒருவரின் மதிப்பை நிர்ணயிக்கும் * பொன்னம்பல அடிகளார் பேச்சு

உயர்ந்த குணங்களே ஒருவரின் மதிப்பை நிர்ணயிக்கும் * பொன்னம்பல அடிகளார் பேச்சு

சென்னை :''அன்பு, பண்பு உள்ளிட்ட உயர்ந்த குணங்கள்தான், ஒருவரின் மதிப்பை நிர்ணயிப்பவை,'' என, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் பொன்னம்பல அடிகளார் பேசினார். எஸ்.ஆர்.எம்.பல்கலை தமிழ் பேராயம், சாகித்திய அகாடமி, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் ஆகியவற்றின் சார்பில், தவத்திரு குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டுக் கருத்தரங்கம் நேற்று நடந்தது. கருத்தரங்கில், சாகித்ய அகாடமி, தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் அறவேந்தன் பேசுகையில், ''நம் வாழ்க்கையை உயர்த்த, கல்வியை கையில் எடுக்க வேண்டும். அதுகுறித்து, குன்றக்குடி அடிகளாரின் கருத்துகளை அறிய, அவரின் வாழ்க்கை வரலாற்றையும் படிக்க வேண்டும்,'' என்றார். தமிழ் பேராயம் அமைப்பின் தலைவர் கரு.நாகராசன் பேசுகையில், ''என் இளம் வயதில், குன்றக்குடி அடிகளாரின் தமிழ் புலமையையும், பேச்சுத்திறமையையும் எண்ணி வியந்து போற்றியுள்ளேன்,'' என்றார். எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குனருமான பாரதிகிருஷ்ணகுமார் பேசியதாவது: மனிதர்களை நெறிப்படுத்த, புத்தகங்களைப் பரிசளித்தவர் குன்றக்குடி அடிகளார். என் மாணவப் பருவத்தில், இரவு 9:00 மணிக்கு துவங்கும் பட்டிமன்றத்தை, தொடர்ந்து ஐந்து மணி நேரம், தரையில் அமர்ந்து கேட்டிருக்கிறேன். நான் பொருளாதாரத்தில் பின்தங்கி இருந்தபோதும், என்னையும் சமமாக அமர்த்தி, என் பேச்சைக் கேட்டு ரசித்ததுடன், எனக்கு 'பாரதி' என்ற புனை பெயரையும் வழங்கினார். மேடையில், தவறான கருத்துகளை கூறினால், அதற்கான தரவுகளைக் கூறியபின், அந்த பேச்சை தொடர சொல்வார். குடிநீர், விவசாயம், கல்வி உள்ளிட்ட சமூக பிரச்னைகளுக்கும் குரல் கொடுத்தவர். இவ்வாறு அவர் பேசினார்.Advertisementhttps://www.youtube.com/embed/DZexVr2-VC4குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தன் நிறைவுரையில், ''ஒருவரை, உயர்ந்த அதிகாரத்தில் இருப்பதாலேயே மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர் மதிக்கப்பட, அன்பு, பண்பு உள்ளிட்ட உயர்ந்த குணங்களும் நெறிகளும் பெற்றிருப்பது அவசியம். அதைத்தான், குன்றக்குடி அடிகளார் எடுத்துரைத்தார்,'' என்றார். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !