உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் சிலைகளை அகற்றிய போலீசார் கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டம்

விநாயகர் சிலைகளை அகற்றிய போலீசார் கண்டித்து ஹிந்து முன்னணி போராட்டம்

சென்னை, விநாயகர் சிலைகளை அகற்றிய போலீசாரை கண்டித்து ஹிந்து முன்னணி யினர் புதுப்பேட்டையில் நேற்று உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில், 1,519 சிலைகள் வைத்து வழிபட போலீசார் அனுமதி வழங்கினர். அனுமதி இன்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் அப்புறப்படுத்தினர். துறைமுகம் மிலிட்டரி தெருவில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை அகற்றும்போது, சிலைகள் உடைந்தன. போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து, புதுப்பேட்டை, கோமலீஸ்வரன்பேட்டையில், ஹிந்து முன்னணியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் சாலையை ஆக்கிரமித்து, விநாயகர் சிலை வைக்க மேடையுடன் பந்தல் அமைக்கப்பட்டது. இது குறித்த புகார் வந்ததையடுத்து, ஏழுகிறது போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், உரிய அனுமதியின்றி சிலை வைக்க அப்பகுதியை சேர்ந்தோர் முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, மேடையை அகற்ற போலீசார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் முயன்றனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்தோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி மேடையை அகற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !